நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு குடியரசு தலைவர் முதுமலை வருகை அனைத்து ஏற்பாடுகளும் தயார் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு குடியரசு தலைவர் முதுமலை வருகை அனைத்து ஏற்பாடுகளும் தயார்

 

IMG-20230805-WA0022

குடியரசு தலைவர் முதுமலை வருகை அனைத்து ஏற்பாடுகளும் தயார் 


முதுமலைக்கு ஜனாதிபதி இன்று வருகை தரும் நிலையில், கால நிலை நன்றாக இருந்தால், மைசூரு தேசிய நெடுஞ்சாலை மூடப்படாது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையையொட்டி நீலகிரி மாவட்டம் முதுமலையில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்  குறும்படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி தம்பதியினரை சந்தித்து உரையாடுவதற்கும், யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளை பார்வையிடவும், யானை பாகன்களிடம் உரையாடுவதற்காகவும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று பிற்பகல் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார்.


இதையடுத்து தெப்பக்காடு யானைகள் முகாம் கடந்த சில நாள்களாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. புது தில்லியிலிருந்து விமானம் மூலம் மைசூர் வரும் குடியரசுத் தலைவர் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி அருகேயுள்ள சிங்காராவில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்துக்கு வர உள்ளார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகிறார். "

 

இதனால் கேரள, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களும், உதகையிலிருந்து மசசினகுடி, தெப்பக்காடு வழியாக கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகு அனுப்பப்பட்டு வருகின்றன.


 குடியரசுத் தலைவரிடம் உரையாட உள்ள பொம்மன் - பெள்ளி தம்பதியினர் கடந்த 3 நாள்களாக காவல்துறை கண்காணிப்பில் இருந்தனர்.


இந்நிலையில் பொம்மன் - பெள்ளி தம்பதியினரை நண்பகல் 12 மணியளவில் போலீசார் தெப்பக்காடு முகாமிற்கு அழைத்து வந்தனர். இதையடுத்து குடியரசுத் தலைவரின் வருகைக்காக அவர்கள் இங்குள்ள குடிலில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர்."

 


முதுமலை புலிகள் காப்பாக , யானைகள் முகாமிற்கு ஜானதிபதி திரவுபதி முர்மு வருவதால், மசினகுடியில் உள்ள ஹெலிபேடில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது


 காவல்துறையினர் கூறுகையில், 'ஜனாதிபதி மைசூருவில் இருந்து ஹெலிகாப்டரில் நேரடியாக மசினகுடி வந்து தெப்பக்காடு செல்வதால், தெப்பக்காடு-மசினகுடி சாலை தற்காலிகமாக மூடப்படும். முதுமலை வழியாக செல்லும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை மூடப்படாது. 


ஆனால், மேகமூட்டமான காலநிலை நிலவினால், மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக, ஜனாதிபதி தெப்பக்காடு வந்து செல்ல வாய்ப்புள்ளது. அந்த நேரத்தில் மட்டும் மைசூரு தேசிய நெடுஞ்சாலை மூடப்படும்,' என்றனர்" 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad