நீலகிரி மாவட்டத்தில் ஜனாதிபதி வருகை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்... - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 4 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் ஜனாதிபதி வருகை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...

 

924 போலீசார் பாதுகாப்பு பணியில்!!!!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு நாளை  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை புரிவதை ஒட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம்...


மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குள் தீவிர கண்காணிப்பு...



நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருகை புரிய உள்ளார்.


அவ்வாறு வருகை புரியும் அவர் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தின் கதாநாயகர்களான  பொம்மன்,பெள்ளி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.


பின்னர் முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமையும் பார்வையிட்டு,முதுமலை தெப்பக்காடு பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை  சந்திக்க உள்ளார்.இதனைத்தொடர்ந்து குடியரசு தலைவர் அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் மாதிரி  கிராமத்தையும் பார்வையிட உள்ளார்.


இதற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வருவதையொட்டி டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் மைசூர் வரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மசினகுடி வந்தடைகிறார்.


மசினகுடியில் இருந்து தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வனச்சாலையில் 6 கிலோமீட்டர் பயணம் மேற்க் கொள்ளவுள்ளார்.


இதனால் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில்,18 ஏடிஎஸ்பி கள்,36 ஆய்வாளர்கள் என மொத்தம் 924 போலிசார் குடியரசு தலைவரின் வருகையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


இதனிடையே தெப்பக்காடு யானைகள் முகாம் உட்பட முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிகள் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலிசார் இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர்.


மேலும் மசினகுடியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டு உள்ள ஹெலிகாப்டர் தளம் தயார் படுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில் குடியரசு தலைவர் பயணம் மேற்க் கொள்ள உள்ள ஹெலிகாப்டர் வெள்ளோட்டம் மேற்க் கொள்ளப்படவுள்ளது.


இதனிடையே முதுமலை யானைகள் முகாம் கூட்டரங்கில் சுற்று சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தலைமையில் அரசு உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.இதனுடைய பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் ஒருவர் பழங்குடியினரை சந்திக்க நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வருகை தர உள்ளதால் குடியரசுத் தலைவருக்கு நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் ,கோத்தர், இருளர், குறும்பர், பணியர், காட்டு நாயக்கர் ஆகிய ஆறு விதமான பழங்குடியினர் மக்கள் தங்களது பாரம்பரிய உடையுடன் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/