கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் சீனிவாசா நகரில் அமைந்துள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உடற்கல்வித்துறை சார்பாக மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீனி .திருமால்முருகன் கோட்டிகளை துவக்கி வைத்தார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா திருமால்முருகன் மாணவிகளை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் உடற்கல்வித்துறை உதவி பேராசிரியர் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர் வெ. புவனேஸ்வரி இறகு பந்து போட்டி, கேரம் பலகை போன்ற போட்டிகளை சிறப்பான முறையில் நடத்தினார் .விளையாட்டுப் போட்டியில் அனைத்து துறை மாணவிகளும் ஆர்வம் உடன் பங்கேற்றனர்.
இறகு பந்து ஒற்றைய பிரிவில் முதுநிலை இரண்டாம் ஆண்டு வேதியியல் துறை மாணவி சி .ஜீவிதா முதலிடமும், இளங்கலை மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி மா .த்ரிஷா இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர். மேலும் இறகு பந்து போட்டி இரட்டையர் பிரிவில் இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு தாவரவியல் துறை மாணவிகள் R.சுகந்தி,T. ஸ்ரீ பூஜா முதலிடமும் இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல் துறை மாணவிகள் ச.ஹப்ஸா பேகம், வே .இந்துமதி இரண்டாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர்.
அடுத்ததாக கேரம் பலகை போட்டியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு தமிழ் துறை மாணவிகள் ச. கார்த்திகா, சு கிருத்திகா முதலிடமும் இளம் அறிவியல் தாவரவியல் துறை மாணவிகள் தே .ஷாலினி ரா. ரஞ்சிதா இரண்டாம் இடமும் இளங்கலை இரண்டாம் ஆண்டு வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை மாணவிகள் S.நந்தினி மூன்றாம் இடமும் பெற்று வெற்றி பெற்றனர் .போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்திய நாராயணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக