பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேண்டு வாத்த்தியங்களுடன் ஊர்வலம் சென்ற பழங்குடியின மக்கள். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேண்டு வாத்த்தியங்களுடன் ஊர்வலம் சென்ற பழங்குடியின மக்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 171 கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே வருவாய்த் துறையினர் பட்டா வழங்கியுள்ளனர். மீதமுள்ள இடங்களுக்கு பட்டா வழங்காததால் விவசாயத்துக்காக கிணறு வெட்டவோ, நிலங்களை சீரமைக்க முயன்றாலோ அவர்கள் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



இதனால் சொந்தமாக நிலங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க முடியாத நிலையில் மலைவாழ் மக்கள் இருந்து வருகின்றனர். பல தலைமுறைகளாக தாங்கள் அனுபவித்து வரும் நிலங்களுக்கு வன உரிமைச்சான்று கேட்டு வனத்துறையிடம் பல முறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.



இந்த நிலையில் மலைவாழ் மக்கள் பயன்படுத்தி வரும் நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், வன உரிமை சான்று வழங்க வேண்டும், பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் கல்வராயன் மலைவாழ் பேரவை சங்கம் சார்பில் தாரைதப்பட்டை, பேண்டு வாத்திய இசையுடன் ஊர்வலம் புறப்பட்டது. வெள்ளிமலை பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் கல்வராயன்மலை தாலுகா அலுவலகம் முன்பு வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/