ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தில் பயங்கரம்; கணவர் வெட்டி படுகொலை; தடுக்கச் சென்ற மனைவி படுகாயம். - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

வியாழன், 3 ஆகஸ்ட், 2023

ஸ்ரீவைகுண்டம் அருகே கால்வாய் கிராமத்தில் பயங்கரம்; கணவர் வெட்டி படுகொலை; தடுக்கச் சென்ற மனைவி படுகாயம்.

1855743-10

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே அதிச்சநல்லூர் அடுத்த கால்வாய் கிராமத்தில் மாயாண்டி என்பவர் வெட்டி படுகொலை. தடுக்கச் சென்ற மனைவி செல்வி படுகாயம். தற்போது கொலையுண்ட மாயாண்டி மீதான கொலை முயற்சி வழக்கு விசாரணையில் அவரது தரப்பில் திருவைகுண்டம் சப்-கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் தெய்வக் கண்ணன் (இவர் கொலையுண்ட மாயாண்டியின் உறவினரும் ஆவார்) மாயாண்டியிடமும் பணம் வாங்கி விட்டு அவரது எதிர் தரப்பிடமும் பணம் வாங்கியுள்ளார்.


இது மாயாண்டிக்கு தெரியவரவே இன்று(03-08-2023) முற்பகல் 11 மணியளவில் திருவைகுண்டம் சார்பு நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வழக்கறிஞர் தெய்வக்கண்ணனுக்கும்,மாயாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. இதில் இருவரும் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்த திருவைகுண்டம் போலீசார் காயமடைந்த வழக்கறிஞர் தெய்வக்கண்ணனை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மாயாண்டியை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 


மாயாண்டி சிகிச்சை முடிந்து இன்று மாலை வீடு திரும்பிய நிலையில், வழக்கறிஞர் தெய்வக்கண்ணன் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் வழக்கறிஞர் தெய்வக்கண்ணன் தூண்டுதலின் பேரில் அவரது சகோதரர்கள் ஆறுமுக பாண்டி உட்பட 3 பேர் கால்வாய் சுடலை கோவில் தெருவில் உள்ள மாயாண்டியை பேச அழைத்து, அவரது வீட்டு முன்பு வெட்டி கொலை செய்தனர். 


அவரது அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த மாயாண்டியின் மனைவி செல்வியையும் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர். செல்வி தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலையுண்ட மாயாண்டி உடல் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் மற்றும் அவரது சகோதரர்களை தேடி வருகின்றனர். 


தொழிலில் கவுரவக் குறைவாக நடந்ததால் ஏற்பட்ட கைகலப்பில் நீதிமன்றத்தில் கவுரவம் போனதால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை நடந்துள்ளது. தற்போது நடந்த கொலை வழக்கில் மேற்படி வழக்குரைஞர் தேடப்பட்டு வருகிறார்.


- தமிழக குரல் செய்தியாளர் Vn சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad