கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராக நத்தம் கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 30 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராக நத்தம் கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை

.com/img/a/

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராக நத்தம் கிராமத்தில் நெல்கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை.


கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கும்மேலாக 1000 மூட்டைக்கு மேலாக விவசாயிகள் நெல்லை தரையில் கொட்டி வைத்திருக்கின்றனர்.. இப்பகுதியில் உள்ள பத்துக்கும்மேற்பட்ட கிராமங்களில் தற்போது குறுவை நெல் அறுவடைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆர்வமாக நெல் அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வரும் விவசாயிகள்  அறுவடை செய்த நெல்லை பத்திரமாக விற்பனை செய்து போட்ட முதலை லாபத்துடன் எடுக்க வேண்டுமே எனப் பெரும்  கவலையடைந்துள்ளனர். சுமார் ஒருவாரத்திற்கும்மேலாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்துள்ள நெல்லை  ஆதிவராகநத்தம் நெல்கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துவந்து தரையில் ஆயிரத்திற்கும்மேற்பட்ட மூட்டை நெல்மணிகளை கொட்டி தார்ப்பாய்களை போட்டு மூடி வைத்துள்ளனர். இப்பகுதிகளில் தினமும் மழை பெய்து வருவதால் தரையில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் சேதம் ஏற்படுகிற நிலை உள்ளதால் உடனே தாங்கள் வைத்துள்ள கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad