கும்பகோணம் ஸ்ரீ விளையாட்டு முத்துமாரியம்மன் ஆலய பால்குட திருவிழா நடைபெறவுள்ளது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

கும்பகோணம் ஸ்ரீ விளையாட்டு முத்துமாரியம்மன் ஆலய பால்குட திருவிழா நடைபெறவுள்ளது.


கும்பகோணம் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதியில் உள்ள எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விளையாட்டு முத்துமாரியம்மன் ஆலய வருடந்த கரஹ மஹோற்ஸவ திருவிழாவை முன்னிட்டு நாளை 35 ஆம் ஆண்டு பால்குடமும் அலகு காவடி திருவிழாவும் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவு உள்ளது.


இந்த பால்குட பவனியும், அலகு காவடி, முதலிய பரிவாரங்களுடன் புறப்பட்டு வீதி வழியாக ஆழ்வான் கோவில் தெரு, மேட்டு தெரு மற்றும் பல விதிகளில் வரையில் ஊர்வலமாகச் சென்று மீண்டும் ஆலயத்தை சென்றடையும்.
.

பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் தொடர்ந்து பால்குட அபிஷேகமும் அலங்கார ஆராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கு அன்னதானமும் 35ஆம் ஆண்டு கஞ்சிவார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.


இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ விளையாட்டு முத்து மாரியமம்மனை திருவருளை பெறுமாறு கோயில் நிர்வாகம் அன்புடன் வேண்டிக்கொள்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/