திருப்பத்தூர் மாவட்டம், குரும்பேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

திருப்பத்தூர் மாவட்டம், குரும்பேரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது, திருப்பத்தூர் மாவட்டம், குரும்பேரி ஊராட்சியில் இன்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் குரும்பேரி ஊராட்சியில் நடைபெறும் ஊழல்களை கண்டித்தும் அரசு ஏரியில் அனுமதி பெறாமல் கனிம வளங்களை விற்பனை செய்வதை கண்டித்தும் PMAY வீடுகள் ஒதுக்கீடு செய்ய ரூபாய் 25 ஆயிரம் முதல் 40ஆயிரம் வரை என லஞ்சம் வாங்கிக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் ராமு மற்றும் அதற்கு உடனடியாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சங்கீதா பிரகாஷ் மற்றும் ஊராட்சி செயலர் தருமன் ஆகியோரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் ராஜா, சரவணன், ஜெகதா, சுலோச்சனா, தீபா, தவணக்கொடி, மற்றும் ஊர் பொதுமக்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.


மேலும் காலை முதலிலே வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டு சம்பவம் அறிந்து வந்த திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் மற்றும் கிராமிய காவல் ஆய்வாளர் நிர்மலா வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூரியதின் பெயரில் அனைவரும் கலைந்து சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.


- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/