சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதி இளையான்குடி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சியில் புதிய ரேஷன் கடை கட்டிடத்திற்கு முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசிரவிக்குமார் அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து இளையான்குடி ஒன்றியம் சீவலாதி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டி முடிக்கப்பட்ட புதிய நாடக மேடையையும் சட்டமன்ற உறுப்பினர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப. மதியரசன் அவர்களும், தெற்கு ஒன்றிய செயலாளர் திரு செல்வராஜ் அவர்களும், கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு தமிழ்மாறன் அவர்களும், கண்ணமங்கலம் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் திரு சுப. தமிழரசன் அவர்களும், பஞ்சனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு தமிழ் மணி, சீவலாதி ஊராட்சி மன்ற தலைவி திருமதி பழனியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் திருமதி மலையரசி ரவிச்சந்திரன், அவைத்தலைவர் திருமதி வருந்தி, திரு கனேசன், ஒன்றிய துணை செயலாளர்கள்
திரு கருணாகரன், திரு சிவனேசன், கழக உடன் பிறப்புகளும், கழக நிர்வாகிகளும், பத்திரிக்கை நண்பர்களும் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் லிவிங்ஸ்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக