செங்கல்பட்டு மாவட்டத்தில் இயந்திரங்களின் மூலம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி: - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

செங்கல்பட்டு மாவட்டத்தில் இயந்திரங்களின் மூலம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி:

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணை எண் 183 நாள்.31 12 2022ன்படி கழிவுநீர் மேலாண்மை (ஒழுங்குமுறை) விதிகள் மற்றும் வழிகாட்டுதலின்படி பாதுகாப்பு உபகரணங்களோடு இயந்திரங்களின் மூலம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி:


செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சியில் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013 விதிகள் 2022இன் படி வீடுகள் கடைகள் வணிக நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் உள்ள நச்சுத் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளை மனிதர்களை கொண்டு மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது இயந்திரம் மூலம் மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்கான பயிற்சி 04.08.2023 அன்று மறைமலைநகர் நகராட்சி பகுதியில் உள்ள மாநில ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தினை சார்ந்த கழிவு நீர் அகற்றம் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் கிளினர்களுக்கான பணிப்பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் மறு வாழ்வு தொடர்பான பயிற்சி காலை 9.30 மணிக்க தொடங்கி மாலை 5.30 மணிக்கு வரை நடைபெற்றது இதனை மறைமலைநகர் நகராட்சி நகர்மன்ற தலைவர் திரு.ஜெ.சண்முகம் அவர்கள். செங்கல்பட்டு மண்டல நகராட்சிகளின் இயக்குநர் திருமதி, சித்ரா அவர்கள், மண்டல நகராட்சி பொறியாளர் திருகருப்பையாராஜா அவர்கள், மறைமலைநகர் நகராட்சி ஆணையர் திரு. த.சௌந்தர்ராஜன் அவர்கள், மறைமலைநகர் நகராட்சி நகர் மன்ற துணைத்தலைவர் திருமதி.சித்ரா கமலக்கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தர்.


இப்பயிற்சியில் கலந்து கொண்ட நபர்களுக்கு கழிவு நீர் தொட்டியினை சுத்தம் செய்யும் பொழுது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள், விழிப்புணர்வு நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/