கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய் நத்தம் கிராம கோவில் பிரச்சனை சம்பந்தமாக கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதி கூட்டம் சமரச பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய் நத்தம் கிராம கோவில் பிரச்சனை சம்பந்தமாக கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதி கூட்டம் சமரச பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு.

கள்ளக்குறிச்சி அருகே எடுத்தவாய் நத்தம் கிராம கோவில் பிரச்சனை சம்பந்தமாக கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த அமைதி கூட்டம் சமரச பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் எடுத்த வாய் நத்தம் என்ற கிராமத்தில் வரதராஜ பெருமாள் திரௌபதி அம்மன் பாஞ்சாலி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களை உள்ளடக்கிய கோவில் உள்ளது. 


இந்த கோவிலை ஊரில் உள்ள மேல் சாதி வகுப்பினர் மட்டுமே கும்பிட்டு வந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலை வழிபட எங்களுக்கும் உரிமை உள்ளது என பட்டியல் இன மக்கள் போராடி வந்த நிலையில் அரசு நிர்வாகம் இருதரப்பினரும் பிரச்சனை இன்றி சாமி கும்பிட்டுக்கொள்ள அனுமதி வழங்கியது.


இருதரப்பினரும் சாமி கும்பிட்டு வந்த நிலையில் தற்போது ஊரில் உள்ள மேல் சாதி வகுப்பினர் மட்டும் கோவிலுக்கு தேர் திருவிழா நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்த பட்டியல் இன மக்கள் தங்களை ஒதுக்கி வைத்து விட்டு தேர் திருவிழா நடத்துவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு அளித்தனர்.


இந்த புகார் மனு தொடர்பாக நேற்று ஆகஸ்ட் 28ஆம் தேதி கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி பவித்ரா தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுத்த வாய்நத்தம் கிராமத்தை சேர்ந்த மேல் சாதி வகுப்பு முக்கியஸ்தர்கள் மற்றும் பட்டியல் இன மக்கள் சார்பில் முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர். 


தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் பட்டியல் இன மக்கள் கோவில் சார்பில் ஓடும் தேர் தங்கள் பகுதிக்கு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு மேல் சாதி வகுப்பினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகின்ற நிலையில், பட்டியலின மக்கள் தங்கள் கோரிக்கையில் பிடிவாதமாக இருந்தனர்.


இதுகுறித்து அலுவலர்கள் மேல் சாதி வகுப்பினரிடம் ஆலோசித்தநிலையில், மேல் சாதி வகுப்பினர் தங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள் நாங்கள் கலந்து ஆலோசனை செய்துவிட்டு வந்து பதில் அளிக்கிறோம் என கால அவகாசம் கேட்டனர். அதன் பிறகு இது சம்பந்தமான கூட்டம் வருகின்ற செப்டம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. செப்டம்பர் ஒன்றாம் தேதி மீண்டும் அமைதி கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் அதில் இருதரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அப்போது இரு தரப்பினரும் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து சமரசம் ஏற்படுத்தி கொள்ளவேண்டும் என அலுவலர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளனர். ஆகஸ்ட் 28 ஆம் தேதி நேற்றைய பேச்சு வார்த்தை முடிவு பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை செப்டம்பர் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/