அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை புதுக்கோட்டை மாவட்டத்தில் திறக்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை புதுக்கோட்டை மாவட்டத்தில் திறக்கப்பட்டது.

.com/img/a/

தமிழகமெங்கும் விவசாய பெருமக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் அவர்களின் உரிமைகளை பெற்றுத்தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும் அவர்களுக்கு அரணாக விளங்கும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோவில் ஒன்றிய, ஒடுக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளத்துப்பட்டி கிராமத்தில் ஒடுகம்பட்டி ஊராட்சி தலைவர் நாகராஜ், மற்றும் ஒடுகம்பட்டி ஊராட்சி செயலாளர் சின்னதுரை தலைமையிலும் மத்தேயு வெள்ளைச்சாமி பாதர் மற்றும் வீரப்பன் முன்னிலையிலும் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) சுப்பிரமணி கொடிக்கம்பம் ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். புதிய நிர்வாகிகளுக்கு பச்சை துண்டு போர்த்தி சங்க உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. 


அதை தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். 
புதுக்கோட்டை மாவட்டம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad