கன்னியாகுமரி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக நியமித்து காவல் கண்காணிப்பாளர் D. N. ஹரி கிரன் பிரசாத் உத்தரவு பிறப்பித்தார். இதில் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் தாலுகா காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.
நெடுஞ்சாலை ரோந்து மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் புதிதாக பணியமர்த்தப்பட்ட காவலர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் 31/07/23 அன்று சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புதிதாக நெடுஞ்சாலை ரோந்து, மதுவிலக்கு பிரிவில் பணிமாற்றப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டும் எனவும், பொதுமக்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்ளவும், பணியின் போது விழிப்புடனும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் பணியின்போது Smart kavalar app மற்றும் FRS app களை பயன்படுத்தி சந்தேக நபர்களின் நடமாட்டங்களை கண்காணிக்கவேண்டும். குற்றங்களை முன்கூட்டியே தடுக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவலர்களிடம் மாவட்டத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்வதை தடுக்கவும் அதிக விலைக்கு மது விற்பவர்களை பிடிக்கவும் இரவு நேரங்களில் விழிப்புடன் ரோந்து அலுவல்களில் ஈடுபட்டு மது விற்பனைகளை தடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். பணியில் நேர்மையின்றி செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். மொத்தம் 140 அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக