தாராபுரம் அடுத்த மேட்டுக்கடையில் தேங்காய் விலையை உயர்த்தி தரக்கோரி சிதறு தேங்காய் உடைத்து கவன ஈர்ப்பு போராட்டம்.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தாராபுரம் அடுத்த மேட்டுக்கடையில் தேங்காய் விலையை உயர்த்தி தரக்கோரி சிதறு தேங்காய் உடைத்து கவன ஈர்ப்பு போராட்டம்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஒன்றியம் மேட்டுக் கடை பகுதியில் தமிழக அரசை கண்டித்து தேங்காய் விலையை உயர்த்தி தரக் கோரியும் 15-ம் நாளாக தேங்காய் விவசாயிகள் சார்பில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.


கள்ளுக்கு உண்டான நிரந்தர தடை நீக்கப்பட வேண்டும், தமிழகத்தில் அனைத்து நியாய விலை கடைகளிலும் இந்தோனேசியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதிலாக தமிழக விவசாயிகள் விலை நிலத்திலிருந்து இறக்குமதி செய்யும் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கப்பட வேண்டும், பச்சைத் தேங்காய் கிலோ ஒன்றுக்கு 50 ரூபாய் வழங்க வேண்டும், கொப்பரை தேங்காய் கிலோ 150 கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோசம் எழுப்பப்பட்டது. 


இப்மாபெரும் போராட்டத்திற்கு ஏர்முனை இளைஞர் அணி குண்டடம் வட்டாரத் துணைச் செயலாளர் மயில்சாமி தலைமை தாங்கினார்.ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜோதி பிரகாஷ் ,துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநில மாநில கொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு, பொங்கலூர் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில அலுவலக செயலாளர் கே.எம்.ராமசாமி பொங்கலூர் ஒன்றிய செயலாளர் ஆர்.பி.பழனிசாமி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.


இறுதியாக ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி நன்றியுரை வழங்கினர் மற்றும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணை விவசாயிகள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/