உளுந்தூர்பேட்டை அருகே செம்மணந்தல் ஊராட்சியில் மின்சார வசதி பெற்று தந்த பகுஜன் சமாஜ் கட்சியினரை நேரில் அழைத்து நன்றி தெரிவித்த கிராம மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை தொகுதி திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்மணந்தல் ஊராட்சி கான்ஷிராம் நகரில் 10 மாதங்களாக மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி தவித்து வந்த 50 மேற்பட்ட கழைக் கூத்தாடி மற்றும் பழங்குடியின குடும்பங்களுக்கு.
அடிப்படை வசதி செய்து தரும் படி ஜூலை 26ம் தேதி நடைபெற்ற போராட்டம் எதிரொலியாக இன்று புதியதாக மின் கம்பம் அமைத்து மின்விளக்குகள் எரிய விடப்பட்டது.
இதனை தொடர்ந்து இருண்ட வாழ்வில் வெளிச்சம் பெற்று தந்த பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் மாவட்ட தலைவர் ந.ஜீவன்ராஜ் ஆகியோரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி கான்ஷிராம் நகர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதில் மாவட்ட செயலாளர் ஆனைவரி மூர்த்தியார், மாவட்ட பொருளாளர் ப.சிவபெருமான், உளுந்தூர்பேட்டை தொகுதி தலைவர் ஜெ.பொன்னுரங்கம், தொகுதி பொதுச்செயலாளர் பெ.ஆரோக்கியச்செல்வம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் - க.சமியுல்லா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக