விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவிற்கு உட்பட்ட பெரிய முதலியார்சாவடி பகுதியைச் சார்ந்த ஜெயபால் (70)மற்றும் மனைவி மீனாட்சி (63) இருவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
இம் மனுவில் அவர்கள் கூறியிருப்பது: நாங்கள் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா முதலியார்சாவடி பகுதியில் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதற்கான சான்றிதழ்கள் சொத்து வரி ரசீது மற்றும் மின் இணைப்பு ரசீது ஆகியவை அரசுக்கு செலுத்தி வருகிறோம். ஆனால் சில நாட்களாக புதுச்சேரி பகுதியை சார்ந்த சில ரவுடிகள் போலிப் பத்திரத்தினை தயாரித்து வைத்துக்கொண்டு நிலம் எங்களுக்கு சொந்தம் என்று கூறி 25/08/2023 அன்று எங்கள் இருவரையும் தாக்கி விட்டு வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்கள் மற்றும் 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் 90 ஆயிரம் ரூபாயினை எடுத்துச் சென்று விட்டனர்.
மேலும் எங்களை அங்கிருந்து விரட்டி விட்டனர் எனவே நாங்கள் செய்வதறியாமல் குழந்தைகளுடன் சாலையோரம் தவித்துக் கொண்டிருக்கிறோம். போலி பத்திரம் தயாரித்து எங்களை விரட்டிய ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மற்றும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்து இருந்தார். மனுவை பெற்ற விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி அவர்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக