மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநில துணைச் செயலாளர். கோ. விமல்குமார் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து!
ராணிப்பேட்டை மாவட்டம் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் மாநில துணை செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் கோ. விமல்குமார் அவர்களை ராணிப்பேட்டை மாவட்டம் மக்கள் தேசம் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி இரா. மே. பசுபதி, அகவலம். செல்வா, சரத்குமார், அஜித்குமார், விஜய், மோகன்ராஜ், சுரேந்தர், அரவிந்த், கணபதி மற்றும் பூவரசன் ஆகியோர் கோ. விமல்குமார் அவர்களை நேரில் சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து அவர்களது அரசியல் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்து தெரிவித்தனர். அதை தொடர்ந்து கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்த்தல், கிராமங்கள் தோறும் மக்கள் தமிழ் தேசம் கட்சியின் கொடி கம்பம் அமைத்தல் என கட்சியின் வளர்ச்சி குறித்து விவாதித்தனர்.
செய்தியாளர் பிரகாசம்
நெமிலி தாலுகா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக