ஆத்தூர் செம்பட்டி ஆட்டுச் சந்தையில் 50₹லட்சம் வர்த்தகம் :
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் செம்பட்டி ஆட்டுச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டுச் சந்தை நடப்பது வழக்கம் அதேபோல் நேற்று 18:8:23 காலை 8 மணிக்கு சந்தை தொடங்கியது இந்த சந்தைக்கு திண்டுக்கல் ஆத்தூர் செம்பட்டி நிலக்கோட்டை ஒட்டன்சத்திரம். வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து ஆடு வளர்ப்போர் மற்றும் வியாபாரிகள் இந்த சந்தைக்கு கூடுவது வழக்கம் இந்த சந்தையில் வெள்ளைஆடு. செம்மறி ஆடு.குரும்பை ஆடு போன்றவை சந்தைக்கு விற்பனைக்கு வந்தன ஏழு கிலோ முதல் 10 கிலோ வரையிலான ஆடு 8000 முதல் 10 ஆயிரம் வரை ஏலத்தில் விற்பனைக்கு போனது நேற்று நடந்த சந்தையின் முடிவில் 50 லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் ஆத்தூர் தாலுகா செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன் மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக