நெய்வேலியில் அனைத்து கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நெய்வேலி அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் அனைத்து கட்சி கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மந்தாரக்குப்பத்தில் நேற்று நடந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி கம்மாபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பாசு தலைமை தாங்கினார்.மதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பிச்சை,மனித நேய ஜனநாயக கட்சி மாநில செயலாளர் இப்ராஹிம்,வர்த்தக சங்க தலைவர் சங்கர்,செயலாளர் பாபு,மனித நேய மக்கள் கட்சி மதர்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கங்கைகொண்டான் பேரூராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைத்து தரவும், என்எல்சிக்கு வீடு, நிலம் வழங்கும் மக்களுக்கு குடியிருப்புகள் இருந்து தற்போது காலியாக உள்ள இடங்களில் மாற்று மனை, புறக்காவல் நிலையம், பொது நூலகம்,பொது கழிப்பிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் என்எல்சி நிறுவனம் செய்து தர வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திராவிட கழகம் சாம்பசிவம் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டார செயலாளர் பெரியசாமி, காங்கிரஸ் நகர தலைவர் தெய்வசிகாமணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம்
குறிஞ்சிப்பாடி செய்தியாளர்
தே.தனுஷ் - 8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக