நீலகிரிமாவட்டத்தில் பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள 'மக்களுக்காக அறக்கட்டளை' நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

நீலகிரிமாவட்டத்தில் பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள 'மக்களுக்காக அறக்கட்டளை' நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது.


சமூகப்பணிகளில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள மக்களுக்காக அறக்கட்டளை அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் முலம் நலன்பயக்கும் உதவிகள்

நீலகிரிமாவட்டத்தில் பல்வேறு சமூகப்பணிகளில்  தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள 'மக்களுக்காக அறக்கட்டளை' நிறுவன தினம் இன்று கொண்டாடப்பட்டது.


தமிழகத்தின் பலபகுதிகளில் இயற்கை இடர்பாடுகளினால் மக்கள் பாதிக்க படும் போது மக்களுக்கு கை கொடுக்கும் மக்களுக்காக அறக்கட்டளை மூலம் கேரள மூனார்,தமிழகத்தின் நாகூர்,கடலூர் பகுதிகள் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்க பட்ட போது மக்களுக்காக அறக்கட்டளை மூலம் பலலட்சம் மதிப்பிலான நலன்பயக்கும்  உதவிகள் வழங்க பட்டன 


கொரோனோ காலகட்டத்தில் நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மிகசிறப்பான மக்கள் நலன்பயக்கும் உதவிகள் பல லட்சம் மதிப்பில் வழங்கபட்டன 


சுமார் 10000 குடுபங்களுக்கு பல்வேறு நலன்பயக்கும் உதவிகளை மக்களுக்காக அறக்கட்டளை வழங்கி உள்ளது மிகவும் குறுபிடதக்கதாகும்


சமூகப்பணி, மக்கள்பணியே சிறந்த பணி  என்ற மகத்தான குறிக்கோளை  முன்னெடுத்து  செயல்படும் இவ்வமைப்பின் மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்

சார்பில் இன்று மசினகுடி பகுதியிலுள்ள, கடநாடு  ஊராட்சிக்குட்பட்ட சொக்கநள்ளி கிராமத்தில் வசிக்கும் மக்கள் அனைத்து குடும்பங்களுக்கும்    அவர்கள்தம் நலன்பயக்கும் உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி  விழாவெடுக்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சி இவ்வமைப்பின் நிறுவனர்  தலைவர் திரு.தமிழ் வெங்கடேசன்  தலைமை மற்றும் ஏற்பாட்டில் நடைபெற்றது 


,உதகை ஜே.எஸ்.எஸ்.மருந்தாக்கியல்  கல்லூரி பேராசிரியர்கள்  இப்பகுதி மக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு சிறப்பான ஆலோசனைகளை  வழங்கினர்.


இந்த ஆலோசனை நிகழ்வில் இக்கல்லூரி துணை முதல்வர் முனைவர்.கே.பி.அருண்  அறிமுகவுரையாற்றினார்.பேரா.சண்முகம்  மூலிகைமருத்துவத்தின் சிறப்பு குறித்தும்,பேரா.கிருஷ்ணவேணி இப்பகுதி மக்களுக்கான உணவு பழக்கம் எவ்வாறு இருக்க வேண்டும்  என்பது குறித்தும்,பெண்களுக்கான மாதவிடாய்  மற்றும் இக்காலத்தில் எப்படி  இருக்க வேண்டும்  என்பது குறித்து பேரா.தீபலட்சுமியும், மகப்பேற்றின் சிறப்பு குறித்து பேரா.பிரியங்கா,மக்கள் மனநலம் பேணுதல் குறித்து  பேரா.கோமதி ஆகியோரும் விழிப்புணர்வு கருத்துகளை  வழங்கினார்கள்.


இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளை  மக்களுக்காக அறக்கட்டளை கெளரவ  ஆலோசகர்  பேரா.எல்.மூர்த்தி  தொகுத்து  வழங்கினார்.


குன்னூர் நகர திமுக பிரமுகரும் சிறப்புமிகு  தன்னார்வலருமான  திரு.கோவர்தனன்,பேரா.சத்திய ரெட்டி,மனநல ஆலோசகர் திரு.பிரதீப்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இதனையடுத்து இப்பகுதியில் வசித்து வரும் சுமார் எழுபது குடும்பத்தவருக்கு ரூபாய் ஆயிரத்துஇருநூறு மதிப்பிலான அரிசி மற்றும் பதினைந்து வகையான மளிகைப் பொருட்கள்  வழங்கப்பட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு கடநாடு ஊராட்சி தலைவர் திருமதி.சங்கீதா சிவமணி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்  திருமதி.கீர்த்தனா,மசினகுடி ஊராட்சித் தலைவர் திருமதி.மாதவி மோகன் ,கடநாடு ஊராட்சி மன்ற  உறுப்பினர்  திரு.சிவமணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மக்கள் நலன்பயக்கும் உதவிகளை வழங்கினர்.


மக்களுக்காக அறக்கட்டளை  கௌரவ ஆலோகர்கள் திரு.உலிக்கல்  சண்முகம்(நல் உள்ளம் அறக்கட்டளை நிறுவனர்)குன்னூர் திரு.ராஜா, உதகை அகில இந்திய வானொலி திரு.சரவணன்,இயற்கை ஆர்வலரும்,செய்தியாளருமான  திரு.நவாஸ், அப்துல்கலாம்  அறக்கட்டளை நிர்வாகி குன்னூர்.திரு.சாதிக், ஓட்டுநர்.மூர்த்தி,திரு.நவீன்,ஜே.எஸ்.எஸ்.திரு.நாகராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர்


இந்த இரு நிகழ்ச்சிகளிலும்  கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மக்களுக்காக  அறக்கட்டளை  நிறுவனர் தலைவர்  திரு.தமிழ் வெங்கடேசன் தனது  நன்றி தெரிவித்துக்  கொண்டார். 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/