கடலூர் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர் குறித்து தகவலை தெரிவிக்க மாவட்ட காவல் துறை வேண்டுகோள் - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர் குறித்து தகவலை தெரிவிக்க மாவட்ட காவல் துறை வேண்டுகோள்


இந்திய அரசின் உத்தரவுபடி வெளிநாட்டினர் தங்குவதற்கு இடம் கொடுப்பவர்கள் அதாவது வீடு, லாட்ஜ், ஓட்டல் மற்றும் விடுதி நிர்வாகிகள் பள்ளி, கல்லூரி நிர்வாகிகள், மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை வீட்டின் உரிமையாளர்கள், வெளிநாட்டினரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்துள்ளோர். 


வெளிநாட்டில் திருமணம் செய்து கொண்டு இங்கு தங்கக் கூடியவர்கள், வெளிநாட்டில் பிறந்து இங்கே பெற்றோருடன் தங்கி படிக்கக் கூடியவர்களின் பற்றிய விவரங்களை உடனடியாக இணையத்தளம் மூலம் தெரிவிக்க வேண்டும்.


S - படிவம்

அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் மாணவர்களைப் பற்றிய விவரங்களை boi.gov.in என்ற இணையத்தள முகவரியில் உள்ள S Form படிவத்தை பூர்த்தி செய்து தெரியபடுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.


c- படிவம்

உறவினர்களின் வீடு மற்றும் லாட்ஜ், ஓட்டல், விடுதி, கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் அயல்நாட்டினருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளோர் அயல் நாட்டினரின் வருகைப் பதிவினை boi.gov.in இணையத்தள முகவரியில் உள்ள c Form படிவத்தில் வெளிநாட்டவர் பற்றிய விபரத்தை பூர்த்தி செய்து 24 மணிநேரத்தில் தெரியபடுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இதை மீறுபவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் இது சம்மந்தமான தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள அயல்நாட்டினர் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/