கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சி பகுதியில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.5.85 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருவதை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண்தம்புராஜ், அவர்கள் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சூல் மிஸ்ரா அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர் லி.மதுபாலன், வடலூர் நகராட்சி ஆணையர் பனுமதி மற்றும் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- குறிஞ்சிப்பாடி செய்தியாளர் தே.தனுஷ் - 8667557062
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக