கடலூர் மாவட்டத்தில் டாம்கோ நிறுவனத்தின் மூலம் கடன் உதவி மாவட்ட ஆட்சியர் தகவல். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஆகஸ்ட், 2023

கடலூர் மாவட்டத்தில் டாம்கோ நிறுவனத்தின் மூலம் கடன் உதவி மாவட்ட ஆட்சியர் தகவல்.

maxresdefault%20(2)

டாம்கோ நிறுவனத்தின் மூலம் கடன் உதவி மாவட்ட ஆட்சியர் தகவல் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்க விரசாத் மரபு உரிமை கடன் திட்டத்தில் பயன்பெற அழைப்பு மத்திய அரசால் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இசுலாமியர், கிறித்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் சமண மதத்தினர் ஆகிய பிரிவினர்களுக்கு மரபு வழி கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு விரசாத் என்ற மரபு உரிமை கடன் திட்டம் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டு, தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் கல்விக் கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.


திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ. 98,000/-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.


திட்டம் 1-ன் கீழ் கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4%, வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000/-மும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 6%, பெண்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது.


விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம் என்ற இணையதள முகவரியில் (அ) https://cuddalore.nic.in/bc_mbc_minorities-welfare/ பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். 


கடனுதவி பெறுவதற்குரிய ஆவணங்கள்
  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கூடிய புகைப்படம் 
  • கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று 
  • ஆதார் அட்டை 
  • வருமானச் சான்று 
  • உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று 6) கடன் பெறும் தொழில் குறித்த விவரம் / திட்டஅறிக்கை ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்ட உரிய ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், கடலூர் 607 001. அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு பண்டக சாலை வளாகம், வெள்ளிக் கடற்கரை சாலை, கடலூர் 607 001. என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பப்படிவத்தை அனுப்பி வைத்தல் வேண்டும்.


மேற்கண்ட பொருளாதார கடனுதவி திட்டத்தினை தகுதியுள்ள சிறுபான்மையினர் பிரிவைச் சார்ந்த கைவினைக் கலைஞர்கள் தங்களது பொருளாதார நிலையினை மேம்படுத்திக்கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ்.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.


- கடலூர் செய்தியாளர் விஸ்வநாதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad