கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதிக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு நகரத்தில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி எம்எல்ஏவுமாகிய அருண்மொழி தேவன் அறிவுறுத்தலின் பேரில், நகர அதிமுக செயலாளர் எஸ் ஆர் மணிகண்டன் தலைமையில், அதிமுக பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானம் செல்லும் என நீதிமன்ற தீர்ப்பு வெளியானதையடுத்து இதனை வரவேற்று நகர அதிமுகவினர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். புரட்சித்தலைவர் எம்ஜிஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வரும் இந்நாள் பொதுச்செயலாளருமாகிய எடப்பாடி கே பழனிச்சாமி இவர்களின் படங்களை கையில் ஏந்தியவாறு மகிழ்ச்சியில் கோஷமிட்டனர்.
புரட்சித் தலைவர் வாழ்க! புரட்சித் தலைவி அம்மா வாழ்க! வருங்கால முதலமைச்சர் எடப்பாடியார் வாழ்க! என்ற கோஷங்களுடன் கையில் அதிமுக கொடிகளை ஏந்தி பட்டாசுகள் வெடித்தும் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு, இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாட்டினர்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர அவைத்தலைவர் கோழி கோவிந்தசாமி, மாவட்ட பிரதிநிதி ராஜகுரு, சங்கர்மற்றும் அண்ணா பிரபாகரன், வார்டு கவுன்சிலர்கள் ரவி, மதியழகன், ராமமூர்த்தி, டைலர் குணசேகரன், ஸ்ரீதர், ஜபருல்லா, மணிமாறன், மகேந்திரன், கமலக்கண்ணன், நேரு,ஹக்கீம், ஆதனூர்பாலு, மூர்த்தி மற்றும் சில நிர்வாகிகளும் அதிமுக தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக