தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தமவிக ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து தமவிக ஆர்ப்பாட்டம்.


மணிப்பூர் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் முதல்வர் பீரேன் சிங்  பதவி விலகக் கோரியும், அரியானாவில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில், பேராவூரணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்க தஞ்சை மாவட்டச் செயலாளர் மருதுகுமார் தலைமை வகித்தார். தமவிக தலைவர் முனைவர் ஆ.ஜீவானந்தம், பொதுச்செயலாளர் தங்க.குமரவேல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஜெயராஜ், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் மாவட்டச் செயலாளர் அனல் ச.ரவீந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரச் செயலாளர் எஸ்.எஸ்.மைதீன், திராவிடர் கழகம் பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், மனித நேய ஜனநாயகக் கட்சி மாநில துணைச் செயலாளர் ச.அப்துல் சலாம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் மாநில இளைஞர் அணி செயலாளர் ரெனி நிஷாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக ரெ.செல்லத்துரை நன்றி கூறினார். 


ஆர்ப்பாட்டத்தில், "மணிப்பூரில் பாலியல் வன்கொடுமையை அரங்கேற்றிய கயவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும். மணிப்பூர், அரியானா மாநிலத்தை கலவர பூமியாக மாற்றும் இந்துத்துவ, ஆர்எஸ்எஸ், பாஜகவை வீழ்த்துவோம். வலதுசாரிகள் கட்டமைக்க நினைக்கும் ஒற்றை இந்தியா கனவை தகர்த்து, மதச்சார்பற்ற இந்தியாவை கட்டமைப்போம்" என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 


- செய்தியாளர் த.நீலகண்டன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/