தூத்துக்குடி ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் ஆடி அமாவாசை திருவிழா.


தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது,  பெரு வணிக நகரமாக விளங்குவது ஏரல் ஆகும். இங்குள்ள நூற்றாண்டு பழமை மிக்க ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமி கோவிலில் ஆடி மற்றும் தை மாதங்களில் அமாவாசை திருவிழா 11 நாட்கள் நாட்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். 


16-ந்தேதி (புதன்கிழமை) இன்று ஆடி அமாவாசை திருவிழா நடக்கிறது. இன்று பகல் சுவாமி உருகு பலகையில் கற்பூரவிலாசம் வரும் காட்சி, அபிசேக ஆராதனை, மாலை இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்ம திருக்கோல பவனி, இரவு 1-ம் காலம் கற்பக பொன் சப்பரத்தில் எழுந்தருளல் நடக்கிறது. இதனையொட்டி காலையில் தாமிரபரணியி நதியில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர். மேலும் பெண்கள், பக்தர்கள் பால்குடம் சுமந்து சுவாமியை வழிபட்டனர். கலையரங்கத்தில் சமய சொற்பொழிவு, பரதநாட்டியம் என பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

விழாவை முன்னிட்டு 16.08.2023 இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, கார், வேன் மற்றும் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. மாயவன் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விழா ஏற்பாட்டினை ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தபாண்டியன் நாடார் செய்திருந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/