ஆட்சி அமைத்ததும் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பது திமுக காவிரி டெல்டா விவசாய சங்கத்தின் தலைவர் மன்னார்குடியில் குற்றச்சாட்டு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2023

ஆட்சி அமைத்ததும் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பது திமுக காவிரி டெல்டா விவசாய சங்கத்தின் தலைவர் மன்னார்குடியில் குற்றச்சாட்டு.


ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாயிகளுக்கு அறிவிப்பு விடுப்பது ஆட்சி அமைத்ததும் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பது திமுக ஆட்சியை பொருத்தவரை இதே வேலையை தான் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என காவிரி டெல்டா விவசாய சங்கத்தின் தலைவர் மன்னார்குடியில் குற்றச்சாட்டு


மத்திய அரசு காரீப் 2022-2023 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 40 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 60 என்றும் நிர்ணயித்துள்ளது.


குறைந்தபட்ச ஆதாரவிலை நெல் உற்பத்தியை பெருக்கும் வகையிலும், விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டிலும் சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107-ம் கூடுதல் ஊக்க தொகையாக வழங்க ஆணை பிறப்பித்து.


அதன்படியே, தற்போது சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 115 என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 160 என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு வழங்க தமிழக அரசு ஆணையிட்டு உள்ளது.


இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகையை (1.09.2022) முதல் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.  இதற்கு  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் காவிரி டெல்டா விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் கொடுப்பேன் என்றார். ஆட்சி அமைத்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இதுவரையிலும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தேர்தல் வாக்குறுதி அறிவிக்கும் போது விலைவாசி என்ன ? வரி என்ன ? மின்சார கட்டணம் எவ்வளவு ? அனைத்தும் விலையேற்றம் அடைந்துள்ளது.


ஆட்சிக்கு வருவதற்கு முன் விவசாயிகளுக்கு அறிவிப்பு விடுப்பது ஆட்சி அமைத்ததும் விவசாயிகளுக்கு துரோகம் இழைப்பது திமுக ஆட்சியை பொருத்தவரை   இதே வேலையை தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகளை ஏமாற்றி கொண்டுதான் இருக்கிறார்கள்.


இந்த திமுக அரசால் விவசாயிகள் நாங்கள் நம்பி ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம் .  உங்களை நம்பியதற்கு விவசாயிகளுக்கு பெரும் அளவில் நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்கள். இப்பொழுது குவிண்டால் ஒன்றுக்கு 3000 ரூபாய் அறிவித்தால் மட்டுமே எங்களுக்கு கட்டுப்படி ஆகும் மொத்தமாக இந்த திமுக அரசு செயல் இழந்து விட்டது.


விவசாயிகளை பகைத்துக் கொண்ட எந்த ஆட்சியும் நிலையாக இருந்தது கிடையாது என காவிரி டெல்டா விவசாய சங்கத்தின் தலைவர் சுவாமிநாதன் குற்றம் சாட்டினார்.


-செய்தியாளர் தருண்சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/