விழுப்புரம் வடக்கு திமுக மாவட்ட செயலாளராக இருந்து வரும் அமைச்சர் மஸ்தானை மாற்ற கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து திமுக கவுன்சிலர்கள் 13 பேர் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டிவனம் நகர் மன்ற நிர்வாகத்தில் திமுக அமைச்சர் மஸ்தானின் குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தி வருவதால் திமுக கவுன்சிலர்கள் 13 பேர் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே திமுக கவுன்சிலரின் கணவருடன் சேர்ந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் அமைச்சரின் குடும்பம் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் திமுக தலைமை கழகமான அறிவாலயத்தில் இளைஞரணி சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு அதிருப்தி கவுன்சிலர் 13 பேரும் வருகை தந்தனர். இவர்கள் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலினை அறிவாலய வாயலில் சந்தித்து விழுப்புரம் வடக்கு திமுக மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து மஸ்தானை நீக்க கோரி விழுப்புரம் வடக்கு மாவட்டத்தை காப்பாற்றுங்கள் என கோஷம் எழுப்பி மனு கொடுத்ததால் அறிவாலய வாசலில் பரபரப்பு தொற்றுக் கொண்டது.
ஏற்கனவே அமைச்சர் மஸ்தான் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பெயர்கள் கள்ளச்சாராயம் விவகாரத்தில் அடிபட்டதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்பொழுது திமுக கவுன்சிலர்களே அமைச்சர் மஸ்தான் மீது புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே திமுக கவுன்சிலரின் கணவர் மருவூர் ராஜா கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போது மஸ்தானின் குடும்பத்தினரின் அழுத்தத்திற்கு ஏற்ப காவல்துறை செயல்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்சி வரும் நிலையில் இந்த திமுக கவுன்சிலர்கள் மனு அளித்துள்ள விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக