புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பெண்களுக்கான இலவச இருதய நோய், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பெண்களுக்கான இலவச இருதய நோய், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம்,புதுக்கோட்டை மா மலர் மருத்துவமனை இணைந்து பெண்களுக்கான இருதய நோய்,சிறப்பு மருத்துவ முகாம் நடத்தினர். பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இருதய நோய் மற்றும் மகளிர்களுக்கான இலவச மருத்துவ முகாமிற்கு புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். 


மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி,துணை ஆளுநர் ஜெயக்குமார், ஆலோசகர் மோகன்ராஜா, குழிபிறை ஊராட்சித் தலைவர் அழகப்பன், மேனாள் தலைவர்கள் பார்த்திபன், தனகோபால், உடனடி முன்னாள் தலைவர் சிவக்குமார், பொன்-புதுப்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர்.முடியரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா அனைவரையும் வரவேற்று பேசினார்.


இம்முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இருதய நோய் மற்றும் மகளிர்களுக்கான இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார்.முகாமில் இருதய நல சிறப்பு மருத்துவர் மாரிமுத்து, மகளிர் நலம் மற்றும் செயற்கை கருவூட்டல் சிறப்பு மருத்துவர் தில்லைமலர் தலைமையிலா மருத்துவ குழுவினர் அப்பகுதி பெண்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை, இரத்த அழுத்தம், இருதய பரிசோதனை, இசிசி, எக்கோ போன்ற பரிசோதனைகள், ஆலோசனைகள் மேற்கொண்டு இலவசமாக மருந்து, மாத்திரை வழங்கினர். இம்மருத்துவ முகாமில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, நகரச் செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாவட்ட விவசாய அணி தலைவர் ஆலவயல் அழகப்பன் அம்பலம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேந்தன்பட்டி இளையராஜா, மாவட்ட பிரதிநிதி காளிதாஸ், நிர்வாகிகள், சிட்டி ரோட்டரி சங்க இயக்குனர்கள் பாரூக்ஜெய்லானி, குணசேகரன், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அசோகன், செயலாளர் Er.முத்தன் அரசகுமார், பொருளாளர் சங்கர், பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர். இம்மருத்துவ முகாமில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் புதுகை ரோட்டரி சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


எம். மூர்த்தி, தமிழக குரல்,மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/