திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 7 கோடிக்கு மேல் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து சாதனை - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 7 கோடிக்கு மேல் வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்து சாதனை

திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கடந்த வருடம் ஜூலை மாதம்  முதற்கொண்டு வேளாண் விளைபொருட்களின் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்திற்கு மதுரை மாவட்டம் மட்டுமின்றி  திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்தும் 772 விவசாயிகள்  அவுரி, உளுந்து, கம்பு, முந்திரி, ஆமணக்கு, மிளகாய் வற்றல், சோளம் ,தேங்காய், கொப்பரை, நாட்டு மல்லி, பருத்தி, காராமணி, பாசிப்பயிறு, நிலக்கடலை, எள், குதிரைவாலி, மக்காச்சோளம், வேப்பமுத்து, நெல் , புளி , துவரை, கேப்பை, சூரியகாந்தி விதை, சனப்பை, வரகு, வெள்ளை துவரை, அவுரிக்காய் ஆகிய 27 வகையான வேளாண் விளை பொருட்களை மறைமுக ஏலத்தில் நல்ல விலைக்கு விற்று பயனடைந்து உள்ளனர்.  


இதன் பலனாக சுமார் 1835 டன் எடையுள்ள வேளாண் விளை பொருள்களை கையாண்டு திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் சாதனை படைத்துள்ளது. அதே போல் கர்நாடகா மாநிலம் மற்றும்  சென்னை, ஒசூர், திருச்சி, எட்டையபுரம், கடம்பூர், ராசிபுரம், சேலம், மயிலாடுதுறை,  காஞ்சிபுரம், நாமக்கல், பொள்ளாச்சி, விருதுநகர், கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, பரமக்குடி, ராஜபாளையம், நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள 143 வியாபாரிகள் ஒரே இடத்தில் தரமான பல்வேறு வேளாண் விளை பொருள்களை தங்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலையில் வாங்கி பயனடைந்துள்ளனர்.  


இந்தளவில் மறைமுக ஏலத்திற்கு அனைத்து தரப்பினரிடம் வரவேற்பு கிடைத்ததன் விளைவாக ஏலம் தொடங்கப்பட்ட 14 மாதங்களில் 7 கோடியே 50 ஆயிரத்திற்கு ஏலம் நடத்தி புதிய  சாதனை எட்டப்பட்டது. மேலும் கடந்த 13 நாட்களில் மட்டும் ஒரு கோடிக்கு ஏலம் நடத்தி சாதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று  (12/08/2023)  தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 26860 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ  23 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 617780 க்கு வர்த்தகம் நடைபெற்றது. 


மேலும் காளப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 4100 கிலோ சிகப்புசோளம் கழிவு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ  17 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 69700 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும் பன்னிக்குண்டு கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 811.300 கிலோ அவுரிக்காய் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 45 க்கு  விலை போனது. இதன் மூலம் ரூ 36509 க்கு வர்த்தகம் நடைபெற்றது. 


மேலும் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 284 கிலோ குண்டு மிளகாய்வற்றல் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 105 க்கு விலைபோனது.   இதன்மூலம் இன்று  ஒரே நாளில்  ரூ 29820 க்கு வர்த்தகம் நடைபெற்றது. 


மேலும் தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 57 கிலோ மிளகாய்வற்றல் சோடை ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 55 க்கு விலைபோனது. இதன் மூலம் ரூ 3135 க்கு வர்த்தகம் நடைபெற்றது. ஆக மொத்தம் இன்று ஒரே நாளில் ரூ 756944 க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

மேலும் விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/