ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் தேக்கத்தால் குளம் போல் காட்சியளிக்கிறது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு போக்குவரத்து பணிமனையில் மழைநீர் தேக்கத்தால் குளம் போல் காட்சியளிக்கிறது.

AVvXsEhpqFiMFihOjutpiLgNd06Nav3Q-split%20(1)

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  வெயிலின் தாக்கம் அதிகரித்து  வந்தது  இந்த சூழலில் கடந்த இரண்டு நாட்களாக   பல இடங்களில் மழை பெய்து வருகிறது, சென்னை வானிலை மையம் அறிவிப்பின்படி தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருந்தது.

 

அதன்படி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று சுமார் 4 மணி அளவில் கன   மழை கொட்டி தீர்த்தது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஆற்காடு  பணிமனையில் நுழைவாயிலிருந்து சுமார் 100 மீட்டர் வரை முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது.

AVvXsEhpqFiMFihOjutpiLgNd06Nav3Q-split

மழைநீர் தேங்கி நிற்பதால் பணிமனையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர், மேலும் எப்பொழுதெல்லாம்  மழை பொழிகிறதோ அப்பொழுதெல்லாம்  மழைநீர் தேங்கி நின்று குளம் போல காட்சியளித்து வருகிறது.


பணிமனையில் தேங்கி நிற்கும்  மழைநீரரை வெளியேற்றுவதற்கு  துறை சார்ந்த அதிகாரிகள் இது வரையில் எந்த நடவடிக்கை எடுக்கவில்லையென்று சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad