சிவகங்கை மாவட்டத்தில் "என்னுடைய தாய்மண் – எனது தேசம்" என்ற அடிப்படையில் தூய்மை படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

சிவகங்கை மாவட்டத்தில் "என்னுடைய தாய்மண் – எனது தேசம்" என்ற அடிப்படையில் தூய்மை படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.

image%20(100)

சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்டரமாணிக்கம் பகுதியில், 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கண்டரமாணிக்கம் பகுதியில்,   என்னுடைய தாய்மண் – எனது தேசம் என்ற அடிப்படையில் தூய்மை படுத்துதல் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் துவக்கி வைத்து தெரிவிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில், 75 வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவினை அடிப்படையாக கொண்டு பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 


அதில், ஒருமுறை பயன்படுத்திய நெகிழிப்பைகளை அப்புறப்படுத்தும் திட்டம் ஒன்றிய மாநில அரசின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு, பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


அந்தவகையில், "என்னுடைய தாய்மண் – எனது தேசம்" என்ற அடிப்படையில்  நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற குறிக்கோளுடன் பொதுமக்களாகிய ஒவ்வொருவரும் நெகிழிப்பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


பொதுவாக ஒருமுறை பயன்படுத்தப்பட்ட நெகிழிப் பையானது தரையில் கிடக்கும் பொழுது அதன் மேல் விழும் மழைத்தண்ணீரோ, கழிவுப்பொருட்களோ, கிடக்கும் பொழுது நெகிழிப்பொருளானது மக்கும் தன்மை இல்லாததால் அதன் மேல் கிடக்கும் பொருட்கள் மூலம் வைரஸ் உருவாகி நோய்த்தொற்றை உருவாக்கும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி மண் வளமும் கெட்டு அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயருவதை தடுக்கும் நிலையையும் நெகிழிப்பைகள் உருவாக்குகிறது.


மேலும், அனைவரும் ஒன்றிணைந்து வருங்காலங்களில் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய நெகிழியை தவிர்த்து, மண் வளத்தை பாதுகாப்பதுடன் சுகாதாரத்தையும் பாதுகாத்திடும் வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மீண்டும் மஞ்சள் பை திட்டத்தினை கருத்தில் கொண்டு அனைவரும் நெகிழிப் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்த்திடல் வேண்டும். 


இதேபோன்று, சுகாதாரத்தினை பேணிக்காத்திடும் வகையில் குப்பைகளை தங்களது பகுதிகளிலுள்ள தெருவோரங்களில் போடாமல், தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை, முறையாக தங்களது வீட்டிலேயே மக்கும் குப்பைஇ மக்காத குப்பை என தரம் பிரித்து தங்களது பகுதிகளுக்கு வரும் தூய்மைப் பணியாளர்களிடம் முறையாக வழங்கிட வேண்டும். இதுகுறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் இந்நிகழ்ச்சியின் மூலம் வழங்கப்படவுள்ளது.


சுகாதாரத்தினை பேணிக்காத்து எதிர்கால சந்ததியினரின் நலன் காப்பது  நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். மேலும், சுற்றுச்சூழலை பேணிக்காத்திடும் பொருட்டு 75 வது சதந்திர தின அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக  மாவட்டத்தின் அனைத்து  ஊராட்சிகளிலும் பல்வேறு பகுதிகளில் தலா 75 மரக்கன்றுகள் நடவுச்செய்து அதனை முறையாக பராமரித்திட அரசால் அறிவுரைகள் பெறப்பட்டு அதற்கான பணிகளும் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. 


அதனடிப்படையில், இன்றைய தினம் கண்டரமாணிக்கம் ஊராட்சியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குமாரப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மரம் நடும் நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு, அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கி தூய்மையை பராமரித்து, சுற்றுச்சூழலை பேணிக்காப்பதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இருந்திடல் வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷாஅஜித் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குமாரப்பட்டி ஊராட்சியில் டாமின் திட்டம் 2022-2023 ன் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினையும், காராம்போடை கிராமத்தில் நமக்கு நாமே திட்டம் 2022-2023ன் கீழ் ரூ.9.09 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலை கடையினையும், மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக முகமையின் திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், பத்மநாபன், ஊராட்சி மன்றத் தலைவர்கள்  இராமு (கண்டரமாணிக்கம்),  பிரமிளா (கீழப்பட்டமங்கலம்), சூரியகலா (குமாரப்பட்டி) மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad