மதுரை மாநகராட்சி என் மண், என் தேசம் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, தீவிர தூய்மைப்பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

மதுரை மாநகராட்சி என் மண், என் தேசம் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, தீவிர தூய்மைப்பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் துவக்கி வைத்தார்.

AVvXsEjT1CDGgjAqElLbDRXn8wSTls5g-split

மதுரை மாநகராட்சி என் மண், என் தேசம் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, தீவிர தூய்மைப்பணிகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த்  துவக்கி வைத்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.52 அருள்மிகு மீனாட்சியம்மன் திருக்கோவில் கீழசித்திரை வீதி பகுதிகளில்; "என் மண் என் தேசம்;" 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, தீவிர தூய்மைப் பணிகளை ம மேயர் இந்திராணி பொன்வசந்த்  இன்று (12.08.2023) துவக்கி வைத்தார்.   


என் மண் என் தேசம் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு, 09.08.2023 முதல் 15.08.2023 தேதி வரை அனைத்து பேருராட்சி மற்றும் நகராட்சி மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடுதல், தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இன்று (12.08.2023) அருள்மிகு மீனாட்சிஅம்மன் திருக்கோவில் கீழசித்திரை வீதியில் தீவிர தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த தூய்மைப்பணி துவக்கத்தில் தூய்மை குறித்த உறுதிமொழியினை, மேயர்  தலைமையில் அனைத்துப் பணியாளர்களும் ஏற்றுக் கொண்டனர். இந்த தூய்மைப்பணியில் சுமார் 150 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிகழ்வின் போது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு, மேயர்  வழங்கினார்.


இந்நிகழ்வில், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாமன்ற உறுப்பினர் பாஸ்கரன், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad