அதன் பின்பு பழங்குடியின மாணவ, மாணவியர்கள் கல்வியில் கவனம் மற்றும் நினைவாற்றல் அதிகரித்து உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்பட வியாழக்கிழமை 10-08-2023 அன்று இரவு உணவு உண்டு அப்பள்ளியில் இரவு தங்கிய திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தன் சொந்த ஏற்பாட்டில் வாழும் கலை அமைப்புடன் இணைந்து இன்று 11-08-2023 காலை இலவச அகவிழிப்பு யோகா பயிற்சி வழங்கி அதன் பின்னர் மாணவ மாணவிகளுக்கு போர்வைகளை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.
இந்த இனிய நிகழ்ச்சியில் தலைமையாசிரியர், இருப்பால் ஆசிரிய பெருமக்கள், யோகா பயிற்சியாளர் கோபி மற்றும் உள்ளாட்சி நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக