திருப்பூரில் துப்புரவு பணியாளர்களின் உரிமைகளுக்காக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) காத்திருப்பு போராட்டம்! - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

திருப்பூரில் துப்புரவு பணியாளர்களின் உரிமைகளுக்காக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) காத்திருப்பு போராட்டம்!

எங்கும் தூய்மையாக இருக்க வேண்டும் ஆனால் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் லேட் ஆகவும், குறைத்தும் கொடுப்போம் சுகாதார ஒப்பந்ததாரர்களின் இந்த சுயநல போக்கை கண்டித்தும், அவுட் சோர்சிங் முறையை கண்டித்தும், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி , பல்லடம், திருமுருகன் பூண்டி, வெள்ளகோயில், காங்கேயம் மற்றும் தாராபுரம் ஆகிய நகராட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் டிபிசி ஊழியர்கள் கலந்து கொண்டனர். 

  1. ஒப்பந்த பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி குறைந்தபட்ச ஊதியங்களை தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வழங்க வேண்டும். 
  2. மேலும் ஒப்பந்த நிறுவனங்கள் விதிமுறைகள் படி நடக்க வேண்டும். தூய்மை பணியாளர்களின் வயதுவரம்பு 21 முதல் 50 வரை என்று நிர்ணயம் செய்ததை கண்டித்தும் பல்லடம் நகராட்சியில் வேலை வழங்கப்படாமல் உள்ள டிபிசி ஊழியர்களுக்கு உடனடி வேலை வழங்கிட வேண்டும், 
  3. மாதம் தோறும் சம்பளம் 4 அல்லது 5 தேதிக்குள் கிடைத்து வந்த நிலையில் தற்போது 11ஆம் தேதி ஆகியும் சம்பளம் போடப்படவில்லை எனவே தாமதம் இல்லாமல் சம்பளம் கொடுக்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்தப் போராட்டத்தில் சி.ஐ .டி. யு. கட்சி நிர்வாகிகள் தொழிலாளர்கள் உட்பட்ட பலர் கலந்து கொண்டனர். 


- மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/