திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலை திருமலைபாளையம் பகுதியில் உள்ள பிரபலமான பள்ளி விவேகம் மேல்நிலை பள்ளி ஆகும்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களில் புகையிலை மற்றும் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவு.
அதன்படி விவேகம் பள்ளியின் தாளாளர் சுப்பிரமணியன் தலைமையில், தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் கலையரசன், காவல் ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர்கள் முன்னிலையில், பழைய நகராட்சி வளாகம் முன்பிருந்து பேண்ட் வாத்தியம் இசையுடன் விழிப்புணர்வு பேரணி துவங்கி, இப்பேரணி பழைய நகராட்சி வளாகத்திலிருந்து பெரிய கடை வீதி கடைவீதி வசந்தா பிறை இங்கு சாலை பொள்ளாச்சி ரவுண்டானா மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்தது.
அதன் பின்னர் தாராபுரம் காவல்துறை கண்காணிப்பாளர் கலையரசன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புகையிலை மற்றும் போதை பயன்படுத்துவதால் உடலுக்கும் மனதிற்கும் மிகவும் கெடுதல் இதன் மூலமாக குடும்பம் மற்றும் சுற்றுவட்டார நண்பர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் இதனால் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் அதிக அளவில் வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால்., இதனை யாரும் புகையிலை மற்றும் குட்கா வஸ்துகளை பயன்படுத்த வேண்டாம். மேலும் உங்களது நண்பர்கள் யாராவது பெட்டி கடைகளில் வாங்குவது தெரிந்தால், அதனை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு காவல் துறையினர்களுக்கு தகவல் அளிக்கவும் இதனால் அவர்களை போதை அடிமையிலிருந்து பத்திரமாக மீட்டெடுக்கலாம் என்று அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் ஆசிரிய-ஆசிரியர்கள், காவல் சார்பு-ஆய்வாளர்கள், காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக