தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் சாத்தான்குளம் TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் D. ஜெபசிங் மனுவேல் முன்னிலை வகித்து வரவேற்றார்கள்.
சாத்தான்குளம் வட்டாச்சியர் தலைமையேற்று கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி சாத்தான்குளம் TNDTA TMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்டு முக்கிய சாலை வழியாக சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில் நிறைவு பெற்றது.
இதில் TNDTA RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் ஹென்றி மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் லயன் M.டேனியல், B.வசந்த், ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக