தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

photo_2023-08-12_22-02-40

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் செயின்ட் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2000 முதல் 2003 ஆம் ஆண்டு வரை சிவில், மெக்கானிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் தொழில்நுட்ப பிவுகளில் பயின்ற முன்னாள் மாணவர்களின் 20ஆம் ஆண்டின் சந்திப்பு 12.08.2023 இன்று காலை 10 மணிக்கு கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்றது. 


கல்லூரி முன்னாள் மாணவர் விக்னேஷ் வரவேற்று பேசினார், சிறப்புரையாக கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ் ஆவுடையப்பன் பேசுகையில் ஓர் எட்டில் பயிலாத பழக்கம் ஈர் எட்டில் கல்லாத கல்வி மூவெட்டில் ஆகாத திருமணம் நால் எட்டில் பெறாத குழந்தை ஐந்தேட்டில் சம்பாதிக்காத சம்பாத்தியம் ஆறேட்டில் செய்யாத செலவு ஏல் எட்டில் செல்லாத யாத்திரை எட் ஏட்டில் சாகாத சாவு இவை யாவும் பயனற்று போகும் எனும் திருவைகுண்டம் குமர குருபரர் வரிகளை மேற்கோள் காட்டி, அதன்படி தங்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என கூறினார். 

photo_2023-08-12_22-02-44

அதனை தொடர்ந்து கல்லூரி துணை முதல்வர் ஜாய்ஸ் மேரி, எலெக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் ஃபென் மேத்யூ, மெக்கானிகல் துறை தலைவர் ஆறுமுக சேகர், சிவில் துறையின் மூத்த விரிவுரையாளர் சந்திரசேகர், எலக்ட்ரிகல் துறை தலைவர் ஜான் செண்பக துறை, முதலாம் ஆண்டு துறை தலைவர் வெங்கடேஷ் மற்றும் மூத்த விரிவுரையாளர் ஜேம்ஸ் ஜெரால்ட் பரிமளம் ஆகியோர் முன்னாள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள், கல்லூரி படிப்பை முடித்து 20 ஆண்டுகள் கடந்து இன்று ஏற்பட்ட சந்திப்பில் முன்னாள் மாணவர்கள் தங்களின் நினைவுகளையும் தாங்கள் பயிலும் போது ஏற்பட்ட அனுபவங்களையும், இப்போது செய்து கொண்டிருக்கும் தொழில் குறித்தும் பகிர்ந்து கொண்டனர். 

photo_2023-08-12_22-02-47

மேலும் இந்நிகழ்வுக்கெனே துபாயிலிருந்து வந்த முன்னாள் மாணவர் வெங்கடேஷ் ஜீவரத்தினம் பேசுகையில் இந்த சந்திப்பின் மூலம் இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று முடிக்கும் அல்லது வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் 10 மாணவர்களாவது பயன் பெற வேண்டும், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற சந்திப்புகள் நடைபெற வேண்டும் அத்துடன் பலர் வேலை வாய்ப்பு பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சி என நெகிழ்ச்சியுடன் கூறினார். 


விழாவிற்கு வந்திருந்த கல்லூரியில் பணி புரியும் முன்னாள் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார் 70 மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், ஆய்வக போதகர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியினை முன்னாள் மாணவர் கார்த்திக் கண்ணன் (மெக்கானிகல்), நயினார்(சிவில்) மற்றும் அரவிந்த் (எலெக்ட்ரானிக்ஸ்) ஆகியோர் செய்து இருந்தனர். 


ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் முதல்வர் எஸ் ஆவுடையப்பன் ஆலோசனைப்படி கல்லூரி பணியாளர்கள் சிறப்பாக செய்து இருந்தனர், முடிவில் அரவிந்த் நன்றி கூறினார்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad