உதகை: போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2023

உதகை: போக்சோ வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.


 உதகை: போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகிழா நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.


நீலகிரி மாவட்டம், கொலக்கொம்பை மேலூா் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவா் அப்புசாமி (55). இவா் 3 மற்றும் 5- ஆம் வகுப்பு பயின்ற 2 மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கொலக்கொம்பை காவல் நிலையத்தில் கடந்த 7.11.2016 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இது தொடா்பான விசாரணை உதகை மகிழா நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.


இதில், குற்றம் சாட்டப்பட்ட அப்புசாமிக்கு மூன்று பிரிவுகளின்கீழ் தலா 7 ஆண்டுகள் வீதம் மொத்தம் 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இரண்டு மாணவிகள் என்பதால் மொத்தம் 42 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உதகை மகிழா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதா் தீா்ப்பளித்தாா்.


மேலும், இந்த தண்டனையை தகுந்த அனுபவிக்கவும் உத்தரவிட்டாா்.அரசுத் தரப்பில் வழக்கறிஞா் மாலினி பிரபாகா் ஆஜரானாா்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 


.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/