நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் பகுதிகளில் 77.வது சுதந்திர தினம் கொண்டாட்டம் மக்கள் மகிழ்ச்சி.. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் பகுதிகளில் 77.வது சுதந்திர தினம் கொண்டாட்டம் மக்கள் மகிழ்ச்சி..


பந்தலூர் பகுதிகளில் 77.வது சுதந்திர தினம் கொண்டாட்டம் மக்கள் மகிழ்ச்சி..


பந்தலூர் பகுதிகளில் சமுக சேவை நிறைந்த நபர் பொது மக்களின் நற் பெயரை பெற்றவர் குழந்தைகளின் பாசத்தை பெற்றவர் இவரை கண்டால் சின்னஞ்சிறு குழந்தைகள் ஓடி வந்து ஆரத் தழுவி அவரிடம் இருந்து மிட்டாய்களை பெற்றுச் செல்லக்கூடிய ஒரு அன்பு நபராக பந்தலூர் பகுதியில் திகழ்ந்து வருபவர் தான் நவ்ஷாத் என்பவர்..


 இவர் நான்கு வயதிலே சமூகசேவையில் ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்தார். இவர் பள்ளி படிப்பின் போது பலருக்கு உதவும் குணத்துடன் வாழ்ந்து வந்தார் அச்சமயத்தில் லஞ்சம் என்றால் என்ன அதனுடைய பாதிப்பு என்ன என்று உணர்ந்த இவர் மகாத்மா சேவை மையம்  என்கின்ற ஒரு அமைப்பை 2007 இல் முறைப்படி பதிவு செய்து அதனை சீரும் சிறப்புமாக நடத்தி வந்தார்.


 இச்சூழலில் ஒவ்வொரு ஆண்டும் இவர் சுதந்திர தினத்தன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தன் சட்டைகளில் மூவர்ணக் கொடி மற்றும் டாலர் போன்ற அமைப்புகள் இருக்கக்கூடிய சட்டையில் பொருத்திக்கொண்டு பந்தலூரை சுற்றி வருவார் .

அன்றைய தினம் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு சுதந்திரம் என்றால் என்ன என்பதனை மக்களுக்கு எடுத்துரைப்பார்.


 தற்போது அவர் கூறுகையில் சுதந்திர தினத்தை மற்றவர்கள் மறந்து விட்டதாகவும் இந்த கனி உலகத்தில் மொபைல் மோகம் கொண்டு சுதந்திரம் என்றால் என்ன என்பது தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்த சூழலில் மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் சுதந்திரத்தை உணர்ந்தால் மட்டுமே லஞ்சத்தையும் ஒழிக்க முடியும் நாட்டில் உள்ளவர்களுக்கு உதவும் மனப்பான்மை வரும் என்றார்.


 இந்த உணர்த்ததனால் இன்னும் பலர் என்னைப் போன்ற இன்னும் சிலர் சுதந்திரத்தை பேணி காக்க அதை உணர்த்துவதற்கு முன் வருவார்கள் என்பது அவருடைய கருத்தாக உள்ளது. மொபைலில் கையில் வந்த பிறகு ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளவோ வாழ்த்து பரிமாறிக் கொள்ளவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பெல்லாம் பெரியவர்களும் சிறியவர்களும் சுதந்திரத்தை உணர்ந்து வந்தார்கள் தற்போது கணினி மயமாகின பிறகு இதனுடைய தாக்கம் குறைந்து விட்டதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

 இவர் இது வரை காரிலோ இருசக்கர வாகறத்திலோ சென்றது கிடையாது அருகில் உள்ள கோவை கூட தெரிந்து கூட இல்லை ..

நான் நடைபயணமாக நடப்பதற்கு மிக முக்கியமான காரணம் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான்  எப்போது லஞ்சம் ஒழியுமோ அச்சமயம் நான் பேருந்திலோ இருசக்கர வாகனத்திலோ செல்வேன் என உறுதி எடுத்து அதனை கடமையோடு செயல்பட்டு வருவதாக  நவ்சாத் தெரிவித்து இருக்கின்றார்.... 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/