தூத்துக்குடி - 77வது "சுதந்திரத் தினத்தை” முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 16 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி - 77வது "சுதந்திரத் தினத்தை” முன்னிட்டு தூத்துக்குடி தருவை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி தருவை மைதானத்தில் நாட்டின் 77 வது  'சுதந்திர தினம்" நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் திரு. கே. செந்தில்ராஜ் இன்று (15.08.2023) காலை 09.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, காவல் துறை, தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அமைதியையும், சமாதானத்தையும் வலியுறுத்தும் விதமாக வெண் புறாக்கள் பறக்கவிடப்பட்டது.


காவல் ஆய்வாளர் சுனைமுருகன் தலைமையில் தூத்துக்குடி ஆயுதப்படை காவல்துறையினரின் 1வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் நங்கையர் மூர்த்தி, 2வது பெண் காவலர்கள் படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் கௌசல்யா மற்றும் 3வது படைப்பிரிவின் கமாண்டராக உதவி ஆய்வாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்து, காவல்துறை அணிவகுப்பு மிக கம்பீரமாக நடைபெற்றது.


இதனையடுத்து, இந்நிகழ்ச்சியில் காவல்துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம், தூத்துக்குடி ஊரக காவல் உதவி கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் ஆகியோர் உட்பட காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட 60 காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.


மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார். சிறப்பாக பணியாற்றிய 60 பதக்கங்களை வழங்கினார். மேலும், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சுகாதாரத்துறை, வேளாண்மை நலத்துறை, கூட்டுறவுத்துறை, உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலர்களுக்கு 363 பேருக்கு சான்றிதழ் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளின் சார்பில் 71பேருக்கு ரூ.1கோடியே 15லட்சத்து 78ஆயிரத்து 334 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


விழாவில் கூடுதல் ஆட்சியர் கெளரவ் குமார், வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் 560 மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் 5 பிரிவுகளாக நடைபெற்றது. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் மூலம் பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக Vn சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/