திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்தியாவின் 77வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் 77வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தேசிய கொடி ஏற்றினார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டனர்.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய
காவல் துறையினர் 31 பேருக்கும்
மற்றும் பல்வேறு துறையை சார்ந்த 274 பேர் அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
சுதந்திர தின விழா 2023 நலத்திட்ட உதவிகள் 239 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் 1 கோடியே 81 லட்சத்து 44ஆயிரத்து 952 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக