வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் அரும்புகள் மெட்ரிக்பள்ளி 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் சார்பில் அரும்புகள் மெட்ரிக்பள்ளி 77வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராஜா குப்பம் அரும்புகள் மெட்ரிக்  பள்ளியில் 77வது சுதந்திர தின விழா குடியாத்தம் நகர லயன் சங்கத்தின் சார்பில் நடத்தியது நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க தலைவர் கமலஹாசன் தலைமை தாங்கினார்.


செயலாளர் முருகதாஸ் பொருளாளர் டிஎஸ்,ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர்  ஆகியோர் வரவேற்றனர். பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளகள் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மாவட்ட பொருளாளர் எம்கே. பொன்னம்பலம் லயன்ஸ் மாவட்ட எல்சிஐஎப் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என். வெங்கடேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகளை  வெற்றி பெற்ற 62 மாணவர்களுக்கு வழங்கினார்கள். 


குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது .நிகழ்ச்சியில் (2024 25)தலைவர் தேர்வு ஜெ.பாபு உறுப்பினர் வசந்த்குமார் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். சுதந்திரதினத்தை முன்னிட்டு பள்ளியில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாட்டு போட்டி கட்டுரை போட்டி பேச்சுப்போட்டி அனைத்தும் நடைபெற்றது.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/