விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுநல அமைப்புகள் சார்பாக 77-வது சுதந்திர தினவிழா - தமிழக குரல் செய்திகள்.

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுநல அமைப்புகள் சார்பாக 77-வது சுதந்திர தினவிழா

.com/img/a/

.com/img/a/

காரியாபட்டியில் சுதந்திர தினவிழா:
காரியாபட்டி -ஆக - 15 . விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுநல அமைப்புகள் சார்பாக 77-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுதந்திர தினவிழா ஒன்றியக்குழுத் தலைவர் முத்துமாரி கொடி ஏற்றிவைத்தார். துணைத்   தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். காரியாபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி சேர்மன் ஆர். கே.செந்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், பொது தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. செயல் அலுவலர் ரவிக்குமார், கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.  காரியாபட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கொடி ஏற்றிவைத்தார். காரியாபட்டி தீயணைப்பு துறை சார்பாக 77-வது சுதந்திர தினவிழா நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார். தீயணைப்பு வீரர்களின் சேவையை பாராட்டி காரியாபட்டி எஸ்.பி.எம்.    டிரஸ்ட் நிறுவனர் எம். அழகர்சாமி விருது வழங்கி பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad


2500ad