தூத்துக்குடி ஏரல் மற்றும் நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம். - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி ஏரல் மற்றும் நாசரேத் சுற்றுவட்டார பகுதிகளில் இந்தியாவின் 77 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்.


நாசரேத், டவர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் தென்திருப்பேரை TNTDA தொடக்க பள்ளியில் 77 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை ஜாய்ஸ் வரவேற்றார், லயன் சங்க தலைவர் அகிலன் தேசிய கொடியேற்றினார், அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர். செயலாளர் லயன் சரண் சுதந்திர தின உரையாற்றினார், பொருளாளர் அந்தோணி ஞானையா மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார், ஏற்பாடுகளை வட்டார தலைவர் லயன் ஆரோக்கியப்பழம் முன்னாள் வட்டார தலைவர் லயன் தேவதாஸ் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஏரல், நகர பேரூராட்சியில் தலைவர் ஷர்மிளா தேவி மணிவண்ணன் தலைமையில் துணைத் தலைவர் ஜான் ரத்தினபாண்டி முன்னிலையில் மற்றும் உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் சார்பாக, ஏரல் பேரூராட்சி அலுவலகத்தில் இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சிகள் பேரூராட்சி உதவியாளர் பேரூராட்சி தலைவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

நாசரேத், சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் மூவர்ண தேசிய கொடியேற்றினார், ஆசிரியை பியூலா ஜாய்ஸ் சுதந்திர தினத்தை குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறினர். அதைத் தொடர்ந்து பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது சுதந்திர போராட்ட வீரர்களை போல வேடம் அணிந்து வந்திருந்த மாணவர்கள் அனைவரையும் கவர்ந்தனர். ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் அறிவுறுத்தல் படி தலைமை ஆசிரியை ஜான்சி கனகராஜ்  மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

நாசரேத்,  தெட்சணமாறா நாடார் சங்க பேட்டையில் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் கொடியேற்றி 77 வது சுதந்திர தின விழாவை கொண்டாடிய நிகழ்ச்சி, நிகழ்ச்சியில் நாசரேத் நகர வியாபார பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/