புதுக்கோட்டை மாவட்டம் வேகுப்பட்டி ஊராட்சியில் 77ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2023

புதுக்கோட்டை மாவட்டம் வேகுப்பட்டி ஊராட்சியில் 77ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், வேகுப்பட்டி ஊராட்சி, சுதந்திர தின கிராம சபை கூட்டம்,15.08.2023 இன்று, ஊராட்சி மன்ற தலைவர் மெ. அர்ச்சுனன் தலைமையில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது.


கிராம ஊராட்சியின் நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தால்.கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம். (ஊரகம்) பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கம், இதர பொருட்கள் குறித்தும் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பெரி. முத்து, ச. செல்வி, மு. கணேசன், கு. தேன்மொழி, ந. அழகி  உள்ளிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் , ஊராட்சி செயலாளர் சுப. சங்கர், MGNREGS திட்ட ஒருங்கிணைப்பாளர் M. பழனியாயி மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.


- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/