சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் நாட்டின் 76வது சுதந்திர தின கொடியேற்று விழா நடந்தது. ஆலைத் தலைவர் மற்றும் ஆலை மேலாண்மை இயக்குனர் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் உள்ள சேத்தியாத்தோப்பு எம்ஆர்கே கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்தியாவின் 76வது சுதந்திர தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஆலையின் தலைவர் கானூர் பாலசுந்தரம் பங்கேற்று ஆலை நிர்வாகத்தின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு தேசியக் கொடியை ஆலைவளாகத்தில் ஏற்றி மரியாதை செய்தார். பின்னர் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனையடுத்து மாணவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு மற்றும் பள்ளிகளில் முதல் மதிப்பெண் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஆலையின் தலைவர் மற்றும் ஆலையின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் பாராட்டுக்கள் தெரிவித்து பரிசுகளை வழங்கி தலைமை உரையாற்றினார்கள். ஆலையின் தலைவர் குறிப்பிடும்போது இந்தாண்டு எப்போதும் இல்லாத அளவில் 2.95 லட்சம் டன் கரும்பு அரவை நடைபெற உதவிய அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார்..
கடலூர் மாவட்டத்தில் இரண்டு தொழிற்சாலைகள் உள்ளன ஒன்று மத்திய அரசின் என்எல்சி நிர்வாகம் மற்றொன்று இந்த எம் ஆர் கே சர்க்கரை ஆலை. எனவேஆலையின் வளர்ச்சியே விவசாயிகளின் வளர்ச்சி, தொழிலாளர்களின் வளர்ச்சிஎன்று குறிப்பிட்டுப் பேசினார். நிகழ்ச்சியில் ஆலை நிர்வாகத்தினர், பணியாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக