நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே தனியாக இருந்த மூதாட்டியை வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த 65 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள காடச்சநல்லூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குஞ்சை அம்மாள் வயசு (70) இவர் தனியாக வசித்து வந்தார் இதே ஊரைச் சேர்ந்தவர் உதயசூரியன் வயசு (65) கட்டிடங்களுக்குபெயிண்ட் அடிக்கும் தொழிலாளி நேற்று முன் தினம் இரவு குஞ்சை அம்மாள் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்.
நள்ளிரவில் நைசாக அவரது வீட்டுக்குள் நுழைந்த உதயசூரியன் குஞ்சாயம்மாளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார், பின்னர் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார் அதன் பின்னர் வெளியில் வந்த குஞ்சாயம்மாள் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தவர்களை அழைத்து நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.
போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுகுமார். தலைமறைவாக இருந்த உதய சூரியனை கைது செய்தனர்.மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டி குஞ்சாயம்மாள் சிகிச்சைக்காக திருச்சங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக