திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று ரூ. 64641க்கு வர்த்தகம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 31 ஆகஸ்ட், 2023

திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று ரூ. 64641க்கு வர்த்தகம் நடைபெற்றது.

திருமங்கலம் விடத்தகுளம் ரோட்டில் அமைந்துள்ள, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (31/08/2023)  சின்னபூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 2175 கிலோ அக்சயா நெல்  ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 29.72 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 64641 க்கு வர்த்தகம் நடைபெற்றது. 


மேலும் காடனேரி மற்றும் டி.கல்லுப்பட்டி கிராமங்களைச் சேர்ந்த மூன்று விவசாயிகளின் 22620 கிலோ மக்காச்சோளம் ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 23.10 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 23 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 520925 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும்  உசிலம்பட்டி மற்றும் காலப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இரு விவசாயிகளின் 14500 கிலோ  இருங்குச்சோளம்  ஏலத்திற்கு வந்தது.  அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 41.50 க்கும் குறைந்தபட்ச விலையாக ரூ 40 க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ 583975 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.


மேலும் உசிலம்பட்டி மற்றும் சின்னபூலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மூன்று விவசாயிகளின் 3122 கிலோ வரகு ஏலத்திற்கு வந்தது. அது கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 38 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 118617 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும்  நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு  விவசாயியின் 149.4 கிலோ  உளுந்து ஏலத்திற்கு வந்தது. அது  கிலோ ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 78 க்கு விலை போனது. இதன் மூலம் ரூ 11653 -க்கு வர்த்தகம் நடைபெற்றது.


மேலும் அய்யங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 1440 மட்டையுடன் கூடிய தேங்காய்கள்  ஏலத்திற்கு வந்தது. அது எண்ணிக்கை ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ 6.50 க்கு விலை போனது. இதன்மூலம் ரூ 9360 க்கு வர்த்தகம் நடைபெற்றது. மேலும்  தங்களாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயியின் 722 கிலோ குதிரை வாலி ஏலத்திற்கு வந்தது. அது கிலோ அதிகபட்ச விலையாக ரூ 48 க்கு விலைபோனது. இதன்மூலம் ரூ 34637 க்கு வர்த்தகம்  நடைபெற்றது.  ஆக இன்று மொத்தம் ஒரே இன்று நாளில் ரூ 121051 க்கு வர்த்தகம் நடைபெற்றது. விபரங்களுக்கு G.வெங்கடேஷ், கண்காணிப்பாளர் அவர்களை  9025152075 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/