வேலூர் மாவட்டம் காட்பாடி ஐ. டி. ஊழியரிடம் ஆன்லைன் மூலமாக ரூ. 5.78 லட்சம் மோசடி. - தமிழக குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 7 ஆகஸ்ட், 2023

வேலூர் மாவட்டம் காட்பாடி ஐ. டி. ஊழியரிடம் ஆன்லைன் மூலமாக ரூ. 5.78 லட்சம் மோசடி.

வேலூர் மாவட்டம் காட்பாடி கே. ஆர். எஸ். நகரை சேர்ந்தவர் தந்தை சாமுவேல். அவரது மகன் ஜேம்ஸ் பால். ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வருகிறார் . இவரது செல்போனில் வாட்ஸ் அப் எண்ணுக்கு கடந்த மாதம் 23-ந் தேதி லிங்க் ஒன்று வந்தது. ஜேம்ஸ்பால் திறந்து பார்த்தபோது ஆன்லைனில் வேலை தருவதாகவும் அதிக அளவில் பணம் சம்பாதிக்கலாம் என கூறப்பட்டிருந்தது. இதனை நம்பிய ஜேம்ஸ் பால் ஆன்லைன் வேலைக்காக கடந்த மாதம் 23-ந் தேதி முதல் இந்த மாதம் 1-ந் தேதி வரை முன்பணமாக ரூ 5.78 லட்சத்தை ஆன்லைன் மூலமாக  செலுத்தினார்.


சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால் தனது வங்கிக் கணக்கில் பணம் இருப்பது போல் காட்டுவதை உணர்ந்த ஜேம்ஸ் பால்  அந்த பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார் ஆனால் பணம் எடுக்க முடியவில்லை. இது குறித்து வாட்ஸ் அப்பில் தகவல் அளித்தவரிடம் கேட்டபோது மேலும் கொடுக்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே பணத்தை திருப்பி தர முடியும் என தெரிவித்தனர்.


இதனால் சந்தேகம் அடைந்த ஜேம்ஸ் பால் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

*/